கலாசங்கமி -2023 விழா இந்த ஆண்டும் எல்லோருடைய அன்போடும் உற்சாகத்தோடும் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் மக்களிசை கலைக்கு முக்கியத்துவம் அளித்து மக்களிசை கலைஞர்களான செந்தில் கணேஷ் ராஜலட்சுமியாகிய எங்களையும் பங்குபெற செய்து கலை நிகழ்ச்சியின் மூலம் மாணவிகளிடம் இக்கலைகளை கொண்டு செல்லும் வாய்ப்பை தந்த கல்லூரி நிர்வாகத்திற்கு மனம் நிறைந்த நன்றிகள்.வணக்கம் நம் கல்லூரி கலாசங்கமி விழாவில் கலந்து கொண்டு மக்களிசைப் பாடல்களை தந்தது பெரு மகிழ்வு. 2000க்கும் மேற்பட்ட மாணவிகளை நீங்கள் கட்டுக்கோப்பாய் வைத்திருந்ததும், உபசரிப்பும், உணவு ஏற்பாடும் ரசனையும் நிறைவைத் தந்தது.