Sundara Avudaiappan
அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர்
இளமையும் திறமையும் கல்வி வளமையும் மிக்க மாணவியர் கூட்டம்..! அவர்களின் வளர்ச்சிக்கு இனிமையாய்த் திட்டமிடும் செயலாண்மைக் குழு..! கிராமத்து மலையுச்சியில் ஓர் நகரத்து அதிசயம்..! நியூயார்க் கூட நிமிர்ந்து பார்க்கும் விரைவில் இக்கல்லூரியை..! வாழ்த்துக்கள்.
Dr.K.Manimegalai
Vice-Chancellor, Mother Teresa Women’s University, Kodaikanal.
The performances of the students are amazing both in curricular and co-curricular activities. I congratulate the teachers, principal and Management for their sincere efforts.
Mr. Solomon Papaia
பட்டிமன்ற நடுவர், ஓய்வுப் பெற்றத் தமிழ்ப் பேராசிரியர்
இனிய வரவேற்பு,தகுதி மிகுதியும் வாய்ந்த ஆசிரியைகள்;;; அவர்களைத் தலைமை தாங்கி நடத்தும் திறமை மிகு முதல்வர்; இளையர்தான்; ஆனால் பணி ஆற்றுவதில் ஆற்றல் மிகு முதியராய் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கல்லூரிச் செயலர்; அவருடன் இணைந்து இனிது செல்லும் செயற்குழு; பிறகு என்ன! இன்றைய வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி பீடு பல பெற்றுப் பெரும் சாதனை செய்யப்போகும் மாணாக்கியர்க்கு என் வாழ்த்துகள்.
முனைவர் இளசை சுந்தரம்
Former Director, Madurai Radio Station.
காலம் என்ற சிற்பி நம்மை செதுக்குகிறான். அதில் நாம் சிற்பமா? சிதறி விழும் கற்களா? சிற்பமாகத்தான் ஆகவேண்டும். அதற்குச் சாதனைகள் செய்ய வேண்டும். அந்த முயற்சிதான் “கலாசங்கமி” திருவிழா. சரஸ்வதி நாடார் கல்லூரி மாணவியரை உற்சாகப்படுத்தும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
Dr.Thamizhachi Thangapandian
Tamil Poet, Theatre Artist and Freelance Writer
மிக நிறைவான, மகிழ்ச்சியான விழா “கலாசங்கமி”. மிகப் பொறுப்புள்ள ஒரு சமுதாய நிறுவனமாக இது கல்விப்பணி ஆற்றுவது மெத்த மகிழ்ச்சி. பேராசிரியர்கள், மாணவிகள் மிகத் திறம்பட நடத்திய இவ்விழாவில் பங்கு பெற்றமை குறித்து மகிழ்வும், பெருமையும். NS கல்லூரி மென்மேலும் வளர்ந்து, சிறப்பான கல்விப்பணி தொடர வாழ்த்துகிறேன்.
Mr.Ajay Rathinam
Film and Television Actor, Student Motivator
Awesome Disciplined College. I am very happy to conduct my stone to diamond Training programme in this lovely college and also honored to be the chief guest of ARTY FIESTA 2014. Looking forward to coming again. God Bless, Jai Hind. In Service to children.
Mrs.Anitha Kuppusamy
கர்நாடக இசைக்கலைஞர்
இக்கல்லூரி 16-ஆம் ஆண்டு ஆண்டுவிழா(அமுதசுரபியில்) என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த கல்லூரி நிர்வாகத்தினருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கல்லூரி மிகவும் கட்டுப்பாட்டுடனும், இங்கு படிக்கும் பிள்ளைகள் சிறந்த திறமைசாலிகளாகவும் உள்ளனர். நாடார் சரஸ்வதி கல்லூரி இன்னும் விரிவடைந்து உலக அரங்கில் சிறப்பு பெற அடியேன் வாழ்த்துகிறேன் நன்றி.
Mrs.Vanathi Srinivasan,
Advocate-Madras High Court
கல்வி மட்டுமல்ல, வாழ்க்கையின் அத்தனை அம்சங்களுக்கும் தேவையானவற்றை தந்து ஊக்குவிக்கும் சிறந்த கல்விநிறுவனமாக செயல்படும் இந்த நிறுவனம் இன்னமும், ஆலமரம் போல் விழுது பலகொண்டு வளர வாழ்த்துக்கள்.
Dr.C.Sundaravalli,
Media Speaker
மிகவும் பின்தங்கிய மண்ணில், கல்வியால் மட்டுமே விடுதலை சாத்தியப்படும் என உணர்ந்து கல்விநிலையங்களை உருவாக்கிய முன்னோர்கள் என் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். பெண்குழந்தைகளின் கல்வி, அறிவுக்கூர்மை, செயல்திறன், பன்முகத்திறன் எல்லாவற்றையும் கூர்மைப்படுத்தி செம்மைப்படுத்தும் ஆசிரியர்களும் நிர்வாகிகளும் வாய்த்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.. வாழ்க உங்கள் கல்விப்பணியும் சமூகப்பணியும்…!
முனைவர்.லேனா தமிழ்வாணன்
எழுத்தாளர், பதிப்பாளர், லேனா பதிப்பகம்.
Too many cooks spoil the broth என்று ஒரு பழமொழி உண்டு. அதில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைச் சகோதரர்கள் தலைமுறை தலைமுறையாக ஒன்றிணைந்து ஒரு கருத்தாய்க் கல்விப்பயிர் வளர்த்து, இந்தக் கல்வி மாவட்டத்தல் எண்ணற்ற மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் வளர்ந்து செழிக்க வைத்துள்ளனர். அமுதசுரபியின் 18 ஆண்டு விழாவில் கலந்து கொண்டதும் 2500 மாணவிகள் மத்தியில் உரையாற்றியதும் மறக்கமுடியாத அனுபவம். மாணவிகள் காத்த கட்டுப்பாடு வியக்க வைத்தது.
Mrs. Latha Rajan, C.A.,
Co-Founder, MaFoi Group of Companies.
It was a pleasure to see the commitment of the management towards the empowerment of girls and to see the girls blossom forth beautifully. My wishes and prayer to the Institution to add a lot more to the community and to the girls in the area. I really enjoyed being the amongst the student today.
முனைவர்.செ.சைலேந்திரபாபு> IPS
Additional Director General of Police, Railways, Tamil Nadu.
It is great pleasure interacting with the students on their Annual Day around 3000 students, all girls attended with captivating attention.
முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிரு~;ணன்; Ph.D(Eng).,Ph.D(Tam)
Public Speaker.
Thanks a million for the most memorable day you all gave me. My best wishes and blessings go with all your academic efforts.