இனிய வரவேற்பு,தகுதி மிகுதியும் வாய்ந்த ஆசிரியைகள்;;; அவர்களைத் தலைமை தாங்கி நடத்தும் திறமை மிகு முதல்வர்; இளையர்தான்; ஆனால் பணி ஆற்றுவதில் ஆற்றல் மிகு முதியராய் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கல்லூரிச் செயலர்; அவருடன் இணைந்து இனிது செல்லும் செயற்குழு; பிறகு என்ன! இன்றைய வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி பீடு பல பெற்றுப் பெரும் சாதனை செய்யப்போகும் மாணாக்கியர்க்கு என் வாழ்த்துகள்